தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படப்பிடிப்பிலிருந்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதலிக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடிப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.
இதனிடையே, மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து நயன்தாரா கடவுள் மற்றும் ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்ததாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. அந்த வகையில், ஒரு ஜோசியர் விக்னேஷ் சிவனை விட உன்னை புரிந்து கொள்ளும் வேறு ஆண்மகன் கிடைக்கப்போவதில்லை என கூறியுள்ளார். இதனால், விக்னேஷ் சிவனை கணவராக மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்தாராம் நயன்தாரா.
ஒருவேளை ஜோசியக்காரர் மாற்றி கூறியிருந்தால் விக்னேஷ் சிவனை கழட்டி விட்டு போகவும் கொஞ்சம் கூட யோசித்திருக்கமாட்டார் நயன்தாரா. சமீபத்தில் நயன்தாரா ஒரு ஜோசியரிடம் தன்னுடைய கல்யாணத்துக்கான தேதியை கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கு அவரும் மார்ச் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியை குறித்து கொடுத்து விட்டாராம். இந்த செய்தி விக்னேஷ் சிவனுக்கு செல்ல, கொண்டாட்டத்தில் உள்ளாராம்.