தனது மகனுக்கு தமிழ் கடவுளின் பெயரை சூட்டிய நடிகர் கார்த்தி.. குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பில் ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்தவர் கார்த்தி. பருத்திவீரன் படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, கோ, சகுனி, மெட்ராஸ் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார் நடிகர் கார்த்தி.

   

இவர் தற்போது ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் இயக்கத்தில் சுல்தான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஏற்கனவே, உமையாள் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நடிகர் கார்த்தி ரஞ்சனி தம்பதிகளுக்கு, இரண்டாவதாக கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தனது மகனுக்கு ‘கந்தன்’ என்று பெயரிட்டுள்ளார் கார்த்தி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில், “கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், குழந்தையின் கைகள் முருகனின் வேலை நினைவுப்படுத்துகிறது.