தனது மகளின் கையால் விருது பெற்ற பிரபல தொகுப்பாளர் கோபிநாத்! இவ்வளவு பெரிய மகளா? வாயடைத்துப்போன ரசிகர்கள்

விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான நீயா நானா மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் கோபிநாத் அவர்கள். இவர் தமிழ் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி இருக்கிறார். பின்பு அப்படியே இவரது பேச்சு திறமையால் மக்கள் மத்தியில் பேசப்பட்டு நீயா நானா மக்கள் கருத்து கூறும் ஷோவை தொகுத்து வழங்க தொடங்கினர்.

   

இவர் வீ ஜே வாக மட்டுமல்லாமல் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுத்தில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்து இருந்தது. இவருக்கு துர்கா என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. நீயா நானா என்ற ஹிட் ஷோவை தொடர்ந்து பல வருடங்களாக நடத்தி வருகிறார் கோபிநாத். நல்ல தமிழ் பேச்சாளரான இவரை பலரும் ஒரு நல்ல உதாரணமாக எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றில் நடைபெற்ற பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத்துக்கு GOLDEN ICON OF TELEVISION விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருதினை அவரின் மகளின் கையால் பெற்று கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. மகளை பார்த்த ரசிகர்கள் கோபிநாத்துக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வியப்பில் உள்ளனர். அது மாத்திரம் இன்றி விருதினை பெற்ற கோபிநாத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

 

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)