தனுஷின் ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது டாப்ஸி இல்லையா? படத்தில் இருந்து பாதியில் வெளியேறிய முன்னணி நடிகை..!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகி இருப்பவர் நடிகர் தனுஷ். அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது தமிழ் நடிகர்களில் மிகவும் பிசியாக இருப்பவர் நடிகர் தனுஷ். ஆம் தொடர்ந்து 10 படங்கள் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

நடிகர் தனுஷின் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்று இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வந்த படங்கள் அனைத்துமே மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் வெளியாகி அனைத்துமே பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றன.

அதிலும் ஆடுகளம் படத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்த டாப்ஸி கதாபாத்திரம் மக்கள் மனதில் இப்போதும் நிற்கும். அப்படிபட்ட வேடத்தில் முதலில் த்ரிஷா தான் நடித்துள்ளார். அதுவும் 4 நாட்கள் படத்தில் நடித்துவிட்டு பின் அந்த நேரத்தில் பாலிவுட் வாய்ப்பு வரவே வெளியேறியிருக்கிறார். அதன் பின்னரே படத்தில் டாப்ஸி கமிட்டாகியுள்ளார்.