தமிழ் திரையை மிரட்டி அசத்திய வில்லன் ரவீந்தர் என்ன ஆனார்..? இவருக்கா இப்படி ஒரு நிலை வரணும் ..!! அவரின் கதி என்ன தெரியுமா..? பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவிங்க ..!!

ஒரு தலை ராகம் என்கிற படம் வெளியாகி 37 வருடங்கள் ஆகி விட்டது. அந்தப் படத்தில் தான் வி ல்லனாக அறிமுகம் ஆனார் ரவீந்தர். அவரது பாடி லாங்க்வேஜ் , டயலாக் மாடுலேஷன் படு வித்தியாசமாக இருந்தது.அவ்வளவுதான் தமிழ் திரையில் ரவீந்தர் சகாப்தம் துவங்கியது. கமல், ரஜினி என சூப்பர் ஹீரோக்கள் படங்களில் இவர் தான் வி ல்லன். நல்ல டான்சர் இவர்.பத்து வருட காலம் பட்டையைக் கிளப்பினார். ராம்-லக்ஷ்மன் படத்தில் கமலும் ரவீந்தரும் டபுள் ஹீரோக்கள், கமல் வரிசையாக ரவீந்தற்கு வாய்ப்புக் கொடுத்தார்.

   

காக்கிச் சட்டை படத்தில் கமலை ஒரு மிரட்டு மிரட்டியது இவரின் நடிப்பு. ஹீரோவாகவும் பல படங்களில் நடித்தார்.‘எச்சில் இரவுகள்’ படம் இவருக்கு இந்திய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. எல்லாம் சரி திடீரென்று காணாமல் போனார்.

எங்கே போனார்..என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இடையில் அவர் புற்று நோய் வந்து இறந்து போனார் என்கிற வதந்தி பரவியது. இது போன்ற பல வதந்திகள் வந்து இவரை உருக்குலைத்தன .ஆனால் பதினைந்து வருடங்கள் த லைமறைவாக இருந்த ரவீந்தரை சத்யராஜ் நடித்த 6.1 படத்தில் நடிக்க வைத்தார் தயாரிப்பாளர் ஆனந்த்.

அதே ஸ்டைல் அதே உடம்பு, அதே இளமை.. அதே வசீகரச் சிரிப்பு என்று அசத்தினார். ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.இவருக்கு வயதே ஆகாதா என்றார்கள். ஆனால் மீண்டும் எஸ்கேப். கேரளாவில் ரவீந்தர் பெரிய பிசினஸ்மேன் என்கிற செய்திகள் வந்தன.

குடும்பம், தொழில், என்று சொர்க்க பூமியான கேரளாவில் அமைதியாக வாழ்கிறார் இந்த அழகான வில்லன். வாழ்த்துகள் சார்.