தல அஜித்திடம் கேள்வி கேட்ட பெண் ரசிகை.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

தமிழ் திரையுலகில் தனி ஒரு ஆளாக எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மக்களிடையே இன்று அல்டிமேட் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டுமே. இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். தல அஜித்தின் படங்கள் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.

   

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தல அஜித் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் பிஸியாக உள்ளார், அண்மையில் பெண் ஒருவர் அஜித்துடன் எங்களை ஞாபகம் இருக்கா என்ற கேள்விக்கு அவர் நின்று பதிலளித்துவிட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…