தமிழ் சினிமாவின் இன்று எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் வாரிசு நடிகர்களாக இல்லாமல் தனது முழு திறைமையை மட்டுமே வைத்து உயர்ந்த நடிகர்கள் என்று சொன்னால் அது ஒரு சில மட்டுமே. இப்படி தமிழ் சினிமாவில் மற்றவர்களைப்போல அல்லாமல் தனி ஒரு ஆளாக எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மக்களிடையே இன்று அல்டிமேட் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டுமே.
அமராவாதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். நடிகர் அஜித் எப்போதும் தனது வேலையில் அதிக கவனம் காட்டக் கூடியவர். வலிமை படத்திற்காக இடைவேளை இல்லாமல் உழைத்து வருகிறார். இப்படி அப்டேட்டிற்காக ரசிகர்கள் செய்த சில விஷயங்கள் தனது வருத்தத்தை தந்ததாக அவரே ஒரு அறிக்கை அண்மையில் வெளியிட்டிருந்தார். தற்போது அஜித்தின் ஃபஸ்ட் அப்டேட் வந்ததால் அதற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் தான் அஜித்- ஷாலினி எடுத்த ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்புகைப்படம் இருவரும் லாக் டவுன் சமயத்தில் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை இணைய வாசிகள் வைரலாகி வருகின்றனர்.