திருப்பதியில் உஞ்சவிருத்தி செய்தவர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்!! அதிர்ச்சியில் மக்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயார் செய்யும் பணியில் சீனிவாசச்சாரி என்பவர் ஈடுபட்டு வந்தார்.

   

இவருக்கு தேவஸ்தானம் சார்பில் திருப்பதி சேஷாசலம் நகரில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு சீனிவாசச்சாரி இறந்ததால் அந்த வீட்டை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதற்காக தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து சென்று பார்த்தபோது, அங்கிருந்த பெட்டியில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

பின்னர் பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வந்து அவற்றை எண்ணிய போது சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.