திருமணமான சில மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு ! வீட்டு சுவற்றில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள்!!

இந்தியாவில் திருமணமான இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவர் குடும்பத்தார் செய்த கொடுமையே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் தர்பங்காவை சேர்ந்தவர் விஷாகா. இவருக்கும் ரிதேஷ் என்பவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன் தினம் விஷாகா வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவருக்கு தாயார் போன் செய்தார்.

ஆனால் வெகுநேரமாக அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் தெரிந்த நபரை அங்கு அனுப்பினார். அங்கு அந்த நபர் வந்து கதவை தட்டிய போது விஷாகா கதவை திறக்கவில்லை.

இதையடுத்து பொலிசார் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விஷாகா தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தார். மேலும் வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த பேப்பரில் ஆண் ஒருவரின் உருவம் வரையப்பட்டிருந்தது.

இதோடு சுவற்றில் ஐ லவ் யூ என ஆங்கிலத்தில் இரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தில் உள்ள வரைந்த உருவம் ரிதேஷுடையது என உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையில் வரதட்.சணை கொடுமை தான் விஷாகா மரணத்துக்கு காரணம் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர். திருமணத்தின் போது 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நகைகள் மற்றும் பரிசு பொருட்களை வரதட்சணையாக கொடுத்தோம்.

ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தார் விஷாகாவை கொடுமைப்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.