திருமண கோலத்தில் தேவதையாக ஜொலித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை துளசி! தீயாய் பரவும் புகைப்படம்

சின்னத்திரை சீரியலில் TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தான். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலை பலரும் வரவேற்கிறார்கள். இதில் அறிமுக நடிகை ரோஷினி கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது.

சீரியலில் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்பது தான் ரசிகர்களின் ஏக்கம். அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கருப்பாகவும் வலம்வருவார் கண்ணம்மா. தற்போது TRP முதல் இடம் பிடிக்க பல பாராட்டுக்கள் சீரியல் குழுவினருக்கு கிடைத்துள்ளது. இதனால் சீரியல் குழுவினர் செம குஷியில் உள்ளனர். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

இந்த சீரியலில் புதிய என்ட்ரீயாக நிறைய பிரபலங்கள் நடிக்கின்றனர். அண்மையில் இந்த சீரியலில் துளசி என்ற வேடத்தின் மூலம் நடிக்க வந்தவர் ஷெரின் ஜானு. இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். இவரது இன்ஸ்டா பக்கத்தை கண்டுபிடித்த ரசிகர்கள் திருமண கோலத்தில் ஷெரின் பதிவு செய்த புகைப்படத்தை தான் மயங்கி அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sherin Janu (@sherin_janu__04)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *