துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை ப்ரியா பவானி சங்கர் எடுத்த புகைப்படம்! வாயடைத்துப்போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இளம் நாயகிகள் அதிகம் அங்கீகரிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன் பின்னர் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆப் டான்ஸ் என பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார்.

   

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலம் நடிகையாக காலடி பதித்தார். இதையடுத்து பல படங்களில் நடிக்க கமிட்டாகினார். மாஃபியா, மான்ஸ்டர், பொம்மை என போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸுடன் ருத்ரன் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.  இந்நிலையில் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன், துளி கூட மேக்கப் போடாமல் நடிகை ப்ரியா பவானி சங்கர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இவருடன் இருப்பது, சின்னத்திரை நடிகை சரண்யா என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..