விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். முதல் சீசனை விட இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றின் நடைபெற்ற பிரமாண்ட விருது வழங்கும் விழாவை குக் வித் கோமாளி புகழ் மற்றும் மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர்.
சமீபத்தில் அனைவரது கவனத்தையும் அன்பையும் பெற்றுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அறிமுகம் என்பது தேவையில்லை. ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் விருது வழங்கும் விழாவில் புகழ் மற்றும் மணிமேகலை இருவரும் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது காமெடி அதகளமாக இருந்தது.
அது மட்டும் இன்றி இது வரை நகைச்சுவையாளராக மட்டுமே இருந்த புகழ் முதல் முறை தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். இதேவேளை, இந்நிகழ்வில் REALITY TELEVISION-ல் COOKU WITH COMALI நிகழ்ச்சியில் MOST POPULAR PERSON விருது அஸ்வின் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் நடிகர் அஸ்வின் எமோஷனாலாக உருகியபடி தேம்பி அழுதுகொண்டே பேசுவதும் அவரை புகழ் தேற்றுகிற புகைப்படமும் பரவி வருகிறது.
View this post on Instagram