கலைஞர்கள் எப்போதும் ஒரே துறையில் இருப்பது இல்லை. ஒன்றில் சாதனை செய்தால் வேறொரு கலையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
அப்படி உதாரணத்துக்கு நிறைய பிரபலங்களை கூறலாம். ரேடியா ஜாக்கியாக இருந்து பின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் மாகாபா ஆனந்த்.
இவர் ஒரு நிகழ்ச்சியில் உள்ளார் என்றால் ஒரே கலகலப்பாக இருக்கும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாக்களுக்கு பஞ்சமே இல்லை. அதே நிகழ்ச்சியில் தனது பாடல் திறமையையும் வெளிக்காட்டியுள்ளார்.
தொகுப்பாளர் பணியை தாண்டி சில படங்களிலும் மாகாபா நடித்துள்ளார்.
இவருக்கு கடந்த மே 20ம் தேதி பிறந்தநாள், அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். அதெல்லாம் தாண்டி சில ரசிகர்கள் அவரின் பிறந்தநாளுக்கு கட் அவுட் வைத்துள்ளனர்.
அந்த புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.