சின்னத்திரையில் வந்த வெள்ளித்திரையில் கலக்கியவர்கள் பலரும் இருக்கின்றனர், ஏன் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். இவர்களில் சிவகர்த்திகேயன் அடுத்தகட்ட புகழுக்கே சென்றுள்ளார் என்றே சொல்லவேண்டும். சாதாரண நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார். தனுஷுடன் காமெடி நடிகராக அறிமுகமானவர் பின்னர் மெரீனா திரைபபடம் மூலம் முழு நேர கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.
பின்னர் வருதப்படதா வாலிபர் சங்கம் திரைப்படம் கொடுத்த வெற்றி இவரை அடுத்தகட்ட கதானயகராகவே உயர்த்தியது என்றே சொல்ல வேண்டும் . தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்கெட்டை உயர்த்திக்கொண்டு யாரும் நெருங்க முடியாத உச்சத்தில் இருக்கிறார் நடிகர் சிவர்கார்த்திகேயன். இவர் திரைப்படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவர் நடிப்பில் அடுத்து டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, அதற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
சிவகார்த்திகேயன் தனது தாய் மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக இத்தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆராதனை என்னும் ஓர் அழகிய மகள் உள்ளார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ஒரு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அவரது மகள் பெரியவராக வளர்ந்து மிகவும் அழகாக காணப்படுகிறார்.