நடிகர் தனுஷின் அதிரடி முடிவு! இனி ஒரே நடிகையுடன் நடிக்க மாட்டாராம்..! ஷாக்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகி இருப்பவர் நடிகர் தனுஷ். அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது தமிழ் நடிகர்களில் மிகவும் பிசியாக இருப்பவர் நடிகர் தனுஷ். ஆம் தொடர்ந்து 10 படங்கள் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

   

ஆம் இவர் நடிப்பில் விரைவில் ஜகமே தந்திரம் ஓடிடி-யிலும், கர்ணன் தியேட்டரிலும் வெளியாக காத்துருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது அவரின் ஹாலிவுட் படத்திற்காக USA சென்றுள்ளார். நடிகர் தனுஷ் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தீடீரென அதிரடியாக முடிவு ஒன்று எடுத்துள்ளாராம். அதாவது இனி ஒரு படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகையுடன் அடுத்து வரும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று தனுஷ் கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் புது முக கதாநாயகியாகளை நடிக்க வைக்கலாம் என்று தனுஷ் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் புது முக கதாநாயகியாகளை நடிக்க வைக்கலாம் என்று தனுஷ் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.