நடிகர் தனுஷிற்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கிறதா? தனுஷ் பற்றிய சீக்ரெட் ஒன்றை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா!!

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது தமிழ் நடிகர்களில் மிகவும் பிசியாக இருப்பவர் நடிகர் தனுஷ். ஆம் தொடர்ந்து 10 படங்கள் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

   

நடிகர் தனுஷின் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்று இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் தனுஷ் சினிமா ஆரம்ப கட்டத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று பேசப்பட்டவர். பின் தனது விடா முயற்சியால் நல்ல தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து இப்போது இவரை போல நடிகன் யார் என்ற அளவிற்கு மற்றவர்களை பேச வைத்துவிட்டார். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகி இருப்பவர் நடிகர் தனுஷ்.

அண்மையில் இவரை பற்றி நமக்கு தெரியாத சீக்ரெட் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. அடுத்து தனுஷின் புத்தகத்தில் இருந்து எதை எடுக்கலாம் என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதைப்பார்க்கும் போது தெரிகிறது தனுஷ் எவ்வளவு புத்தகம் படிப்பதை ரசிப்பவர் என்று. ரசிகர்களும் தனுஷிற்கு இப்படி ஒரு பழக்கமும் உள்ளதா என்று பார்க்கின்றனர்.