நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சி கிச்சைக்காக நடிகர் சிரஞ்சீவி 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். வில்லன்… நகைச்சுவை என்று நடிப்பில் கலகலப்பூட்டிய நடிகர் பொன்னம்பலம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை செலுத்த சிரமப்பட்டு வந்தவருக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். இதனை, வீடியோவாக வெளியிட்டுள்ள பொன்னம்பலம்”சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ரொம்ப நன்றி அண்ணா.
எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 2 லட்சம் கொடுத்ததை ரொம்பவும் உதவியாக இருந்தது. உ யிருள்ளவரை மறக்கமாட்டேன். அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி” என்று உருக்கமுடன் வீடியோ வெளியிட்டுருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.