நடிகர் ரஹ்மானுக்கு இவ்வளவு பெரிய மகளா…? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

மலையாளத்தில் முதன் முதலில் அறிமுகமாகி அதன்பின் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகர் ரஹ்மான்.புதுப்புது அர்த்தங்கள், சங்கமம், ராம், உள்ளிட்ட படங்கள் நடிகர் ரஹ்மானுக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதன்பின் சில ஆண்டுகள் பெரிதும் ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சிங்கம் 2, பில்லா, போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

   

ஆனால் மீண்டும் துருவங்கள் 16 படத்தின் மூலம் ஹீரோவாக சூப்பர்ஹிட் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகர் ரஹ்மான்.இவர் Meherunnisa என்பவரை 1993ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகிய இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் நடிகர் ரஹ்மான் சமீபத்தில் தனது குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இதில் நடிகர் ரஹ்மானின் மகள்களும் இடம்பெற்றிருந்த நிலையில், ரஹ்மானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா என ரசிகர்கள் கேட்க துவங்கிவிட்டனர்.இதோ அந்த புகைப்படம்..