நடிகர் விஜய் முதல் படத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தளபதியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் தளபதி விஜய். ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்கள் கொடுத்து வந்தார். பல போராட்டங்களைக் கடந்து வந்து இன்று ரசிகர்களின் மனதில் தளபதியாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தளபதி விஜய் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சில சுவாரஷ்ய தகவல்களை பார்க்கலாம். நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆகும் முன்பு 1984ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெற்றி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதற்கு அவர் வாங்கிய முதல் சம்பளம் 500 ரூபாய் என்றால் இன்று உங்களால் நம்ப முடிகின்றதா? விஜய் தான் LKG படிக்கும் போது தனக்கு கொடுக்கும் பாக்கெட் மனியை வைத்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு பேனா மற்றும் பென்சில் போன்ற தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பாராம். நடிகர் விஜய் மொத்தம் 3 திருமண மண்டபங்கள் சொந்தமாக வைத்துள்ளார். இதில் பல திருமணங்கள் இலவசமாக செய்துள்ளார்.

விஜய்க்கு ஹோட்டல் சரவணபவன் உணவு மிகவும் பிடிக்குமாம், சூட்டிங் தவிற வீட்டில் இருக்கும் நேரத்தில் எப்படியாவது ஒரு முறையாவது சரவணபவன் சென்று சாப்பிட்டுவிடுவாராம். சங்கர் இயக்கிய மெகா ஹிட் படம் முதல்வன் படத்தில் நடிக்க முதலில் விஜய்யிடம் தான் பேசப்பட்டது. சரியான திகதி இல்லாததால் பின்னர் அர்ஜூன் கைக்கு சென்று அந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு மிகச்சிறந்த படமாக மாறியது.