நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தொழிலதிபருடன் திருமணமா? அவரே அளித்த பதில்! ஷாக்கில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர், இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பிரபல OTT தளங்களில் வெளியானது. அதுமட்டுமின்றி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து, சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள கீர்த்தி, அதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். எங்கிருந்து இந்த தகவல் வெளியானது என்று தெரியாது. எனக்கு அந்தமாதிரி எந்த திட்டமும் இல்லை. இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை. எனது சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *