நடிகை சங்கீதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? அம்மாவை மிஞ்சிய அழகு! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

குணச்சித்திர நடிகையாக பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்தியர் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா என்றதும் உடனே பலரின் நினைவிற்கு வருவது பாலா இயக்கத்தில் வந்த பிதாமகன் திரைப்படம் தான். அவரின் கேரக்டர் மக்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்த இவர் பிதாமகன் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெற்றார்.

   

உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இவர் விக்ரம், சூர்யா, மாதவன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ள இவருக்கு கடந்த 10 வருடங்களாக வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். பாடகர் கிருஷ் என்பவரை கடந்த 2009 ல் திருமணம் செய்துகொண்டார். 2012 ல் ஷிவியா என்ற மகளும் பிறந்தார்.

தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பதக்கத்தை தன் மகளின் கழுத்தில் அணிவித்துள்ளார். குழந்தை ஷிவியா தற்போது வளர்ந்த சிறுமியாகவிட்டாள். அந்த அழகான சிறுமியின் சிரித்த முகமும், கண்களும் அனைவரையும் கவர்ந்துள்ளன.