விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் நடிகை சாய் பல்லவி.
மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..