நடிகை ஜெனிலியாவின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா? வெளியான அழகிய குடும்ப புகைப்படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஜெனிலியா. விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன், விஜய்யுடன் வேலாயுதம் என சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்தார்.

   

துறுதுறு செய்கையாலும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா. தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்து வந்த நடிகை ஜெனிலியா தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து வந்தார். இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ஜெனிலியா. நடிகர் ரிதேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் சினிமாவில் நடிக்காமல் தனது குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் மீண்டும் சினிமாவில் நடிப்பதறகக உடல் எடையை குறைத்துள்ளார் நடிகை ஜெனிலியா. இந்நிலையில் நடிகை ஜெனிலியாவின் மகன், மகளின் என அனைவரும் இணைந்திருக்கும் அவரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..