நடிகை தேவதர்ஷினியின் மகள் யார் தெரியும்மா ..?? அட இவரும் ஒரு பிரபல நடிகையா ..!! யாருன்னு நீங்களே பாருங்கள் ..!!

மர்மதேசம்’ என்றால் என்ன என்பது இன்றைய 2k கிட்ஸ்களுக்கு அதிகம் தெரியாது. அதில் நடித்த சேத்தனையும் அவர்களுக்கு பெரியளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை பார்த்தாலும் கூட, இவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்ற அளவோடு தான் இருக்கும். ஆனால், 90’ஸ் கிட்ஸ்களை ஒரு மிரட்டு மிரட்டியவர் இந்த சேத்தன். ராஜ் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் தொடரில், கருப்பு சாமியாகவும், கதையின் நாயகனாகவும் நடித்து மிரள வைத்திருந்தார். அத்தொடரில் உடன் நடித்த நடிகை தேவதர்ஷினியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

   

இன்றும் தொலைக்காட்சி, சினிமா என்று பிஸியாக இருக்கும் சேத்தன், தனது மனைவியின் சினிமா ஆசைகளுக்கு எந்தவித தடையும் விதிக்காமல், மனைவிக்கான ஸ்பேஸை அவர் விருப்பம் போலவே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். சேத்தன்-தேவதர்ஷினி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த ’96’ படத்தில் இளம் தேவதர்ஷினி கேரக்டரில் நடித்ததே அவர் தான். கணவர் சேத்தனை விட அதிக திரைப்படங்களில் தேவதர்ஷினி நடித்து வருகிறார். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, சினிமாவிலும் இடைவிடாமல் நடிப்பது என்பது மிக மிக கடுமையான வேலை. அதை அனுபவித்து பார்ப்பவர்களுக்கே தெரியும்.

குடும்பத்தில் எப்படிப்பட்ட சூழல் நிலவினாலும், கேமரா முன்பு நின்றுவிட்டால், அந்த கேரக்டராகவே மாறவிட வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கே.. அது மிகக் கொடுமையானது. ஆனால், தேவதர்ஷினி இதை மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறார். அதற்கு மிக முக்கிய காரணம் கணவர் சேத்தன் தான்.

அவரது அனுசரணையான ஒத்துழைப்பே அந்த குடும்பத்தின் வெற்றிக்கு காரணமாகும் “சில வீடுகளில் இந்த துறையில் இருப்பவர்கள் மற்றவர்களுடைய வேலைகளில் தலையிடமாட்டார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அப்படிக் கிடையாது.எந்த விஷயமாக இருந்தாலும் பகிர்ந்து கொள்வோம். இது எங்களுக்குள் தவறாமல் நடிக்கிற நல்ல விஷயம்னுகூட சொல்லலாம்.

அவருடைய நடிப்பில் எதாவது சந்தேகம் இருந்தாலோ, என் சார்பில் என்ன மாற்றிக்கொள்ளவேண்டியது என்னவோ அதையெல்லாம் ஒருவருக்கொருவர் பேசி சரி செய்து கொள்வோம். அதனால்தான் இன்று வரை எங்களுடைய பெஸ்டை கொடுக்க முடியுது” என்று சேத்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய இந்த வாக்கியங்களே அவர்களின் வெற்றிக்கு சான்று.