தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகளும் அறிமுகமாகி சில படங்களில் கலக்கி பின்னர் இடம் தெரியாமல் சென்று விடுகின்றனர். இப்படி இவர்களில் யாரவது ஒரு சில நடிகைகளே முதல் திரைப்படத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தகட்ட திரைப்பயணத்திற்கு தன்னை எடுத்து செல்கின்றனர். இப்படி 90களில் தமிழ் சினிமா இளம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரம்பா.
நடிகர் பிரபு நடிப்பில் வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் இந்த திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்களுக்கு பிடித்து போகவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இப்படி அதன் பின்பு நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் வெளியான உள்ளதை அள்ளித்தா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவருக்கும் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
ஈழத்து தொழிலதிபரான ரம்பாவின் கணவர் குழந்தைகளுடன் இருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரம்பா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் காணொளிகள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் வெளியிட்ட காணொளி அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இதேவேளை, ரம்பாவை பார்த்த ரசிகர்கள் மகள்களையும் அழகில் மிஞ்சி விட்டதாக கூறி வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram