தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் கன்னட திரைப்படங்கள் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர். ஆனால் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் எனும் படம் தான் இவருக்கு தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாற்றியது. அதன் பின்னர் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே அமைந்தது.
இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு பில்லியன் டாலர் மொத்த வசூல் பெற்ற மிகச் சில நடிகைகளில் ரஷ்மிகாவும் ஒருவர் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் ஒருவர் ஆவார். அவர் ஊடகங்கள் மற்றும் கன்னட திரையுலகால் ‘கர்நாடக க்ரஷ்’ என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். கன்னடம், தெலுங்கு மொழிகளுக்கு பின் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா உடல் எடை கூட குண்டாக மாறியுள்ளதுபோல் தெரிகிறார். எப்போதும் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை ஸ்லிம்மாக வைத்து வந்த நடிகை ரஷ்மிகா மந்தனா, உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளது, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..