நடிகை ராதிகாவா இது? வெள்ளை முடியுடன் வயதான தோற்றத்தில் இருக்கிறாரே! தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் 80களில் உச்ச நட்சத்திர நாயகியாக இருந்த நடிகை ராதிகா 1999-க்கு பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். ஆனால் வெள்ளித்திரையில் நடிப்பை தொடர்ந்து செய்து வரும் நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார்.

சினிமா போன்று சின்னத்திரையிலும் பெரும் வரவேற்பை பெற்ற ராதிகா சன் டிவியில் கடந்த 1999 முதல் 2001 வரை ஒளிபரப்பான சித்தி தொடரின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இதைத் தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே மற்றும் இரண்டை வேடங்களில் வாணி ராணி என அனைத்து சீரியல்களிலும் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 22 வருடங்களுக்கு பிறகு சித்தி தொடரின் 2-ம் பாகமாக சித்தி 2 சீரியலை தயாரித்து நடிக்க தொடங்கினார்.

சமீபத்தில் நான் இனி சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க போவதில்லை, இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ராதிகா திடீர் அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் நடிகை ராதிகா வெள்ளை முடியுடன் வயதான தோற்றத்தில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..