நடிகை வனிதாவின் ஐந்தாவது கணவர் இவரா? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா. இவரைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அதுவும் இந்த லாக்டவுன் காலத்தில், ரசிகர்களை என்டர்டைமெண்ட் செய்த விஷயமே வனிதா பீட்டர் பால் திருமணம் தான். பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிறகு பல்வேறு காரணங்களுக்காக செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார் வனிதா.

   

இவர், பிக்பாஸ் வீட்டில் ஏற்படுத்திய பிரச்சனைகள் தொடங்கி, வெளியில் வந்த பின் தொடங்கிய யூடியூப் சேனல், காதல் திருமணம், அதனால் வெடித்த சர்ச்சை, விவாகரத்து ஆகியவற்றால் சினிமாவில் உள்ள பலரையும் பகைத்துக் கொண்டார் வனிதா. தற்போது அதிக அளவு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கொண்டிருப்பது வரை வனிதா கடந்த இரண்டு வருடமாக அதிகம் பேசப்பட்ட ஒருவராக தான் இருந்து வருகிறார்.

இந்நிலையில், வனிதாவின் முந்தைய திருமணங்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி விவகாரத்தில் முடிந்துவிட்ட நிலையில் அவர் எப்போது அடுத்த திருமணத்தை அறிவிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடம் காத்திருக்கின்றனர். இதையடுத்து, தற்போது வனிதா பிரபல சீரியல் நடிகர் அரவிந்த் உடன் இருக்கும் போட்டோவை போட்டு அவர் தான் வனிதாவின் ஐந்தாவது கணவர் என நெட்டிசன்கள் மீம் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.