நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியுடன் குக் வித் கோ மாளி சிவாங்கி..! இணையத்தில் பட்டையை கி ளப்பும் புகைப்படம்..!

தமிழ் திரையுலகில் ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்குபெற்ற பல பிரபலங்களும் தற்போது சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் வலம் வருபவர் தான் சிவாங்கி இவர் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றிருந்தார்,

   

இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் குறும்புத்தனமும் விளையாட்டுத்தனமான பேச்சும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் தற்போது சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் இவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதேசமயம் உதயநிதி நடித்துவரும் ஆர்டிகல் 15 படத்தின் ரீமேக்கிலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவாங்கி இவ்வாறு பிரபலமடைந்த சிவாங்கி சமீப காலமாகவே தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது ஏனென்றால் இந்த புகைப்படத்தில் நமது நாட்டின் பிரதமர் மோடியின் மெழுகு சிலையுடன் சிவாங்கி புகைப்படம் எடுத்துள்ளார்,

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு எதற்கு உங்களுக்கு இந்த குசும்பு என இவரை கலாய்த்து வருகிறார்கள்.