ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவை தனது நடிப்பு திறமையால் ஒரு கலக்கு கலக்கி கொண்டு வரும் நடிகை இவர் தற்போது கோலிவுட் நடிகைகள் அனைவர்க்கும் இவர் ஒரு போட்டியாகவே இருந்து வருகிறார். இவர் தமிழில் தனது முதல் படமான நீதானா அவன் என்னும் படம் மூலம் சினிமா திரைக்குள் அறிமுகமானவர்.இவர் அதற்கு முன்பு சின்ன திரையில் சன் டிவியில் ஒளிப்பரப்பு ஆனா அசத்த போவது யாரு என்னும் ஷோ வின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
இவர் பின்பு நடன ஷோவன மானாட மயிலாட என்னும் ஷோவின் வெற்றியாளர் இவர் தான். சின்னத்திரையில் முதன் முதலில் தனது திரையுலக பயணத்தை துவங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
பா. ரஞ்ஜீத் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமாகி, காக்க முட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஐஸ்வர்யா. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகை என்பது பலருக்கும் தெரிந்தது, ஆனால் அவர் அண்ணனும் ஒரு நடிகர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் சின்னத்திரை நடிகர் மணிகண்டன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அவரின் புகைப்படம்..