நான் கருப்பன் வந்துருக்கேன்.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டேன்.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ

சிறுவன் ஒருவன் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், 8 நாளில் காப்பாற்றி கொடுக்கிறேன் என பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் சிறுவனிடம் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளிக்கும் சிறுவன் கருப்பசாமி தனக்குள் வந்து பேசுவது போல் தெரிவிக்கின்றான். அதில், நான் கருப்பன் வந்திருக்கிறேன்.

   

நாட்டை காப்பாற்ற வந்துள்ளேன். கொரோனாவில் இருந்து உங்களை காப்பாற்ற, ஊரை காப்பாற்ற வந்துள்ளேன். 8 நாளில் காப்பாற்றி கொடுக்கிறேன். ஊரை காத்து கொடுத்துவிடுவேன்.

கொரோனாவை மாற்றி விடுவேன். கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடித்து விட்டேன்.

 

வீட்டிலேயே இருங்கள். கைகளை நன்கு கழுவுங்கள். கடையில் சோப்பு வாங்கி கழுவுங்கள் என கூறிவிட்டு மலையேறிவிட்டதாக சிறுவன் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.