நிச்சயதார்த்தம் முடிந்ததா? நயன்தாரா கையில் மோதிரம்! விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்

தமிழ் திரையுலகில் தங்களுடன் ஒன்றாக நடித்தவர்களையே காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். பிரபலங்களில் சூர்யா-ஜோதிகா ஜோடி தான் அதிகம் கொண்டாடப்பட்டது. அடுத்து அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா என பிரபலங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்கள். இவர்களை விட 80களில் உள்ள பிரபலங்கள் சிலர் கூட நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.

   

அப்படி விரைவில் திருமணம் செய்ய இருப்பவர்கள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் படத்தின் போது நயன்தாராவுடன் அவருக்கு காதல் ஏற்பட இன்னும் அவர்களது காதல் தொடர்ந்து வருகிறது. அவர்களின் திருமணம் எப்போது என்று கேட்காத ரசிகர்களே இல்லை. அவர்களோ திருமணத்தின் போது கண்டிப்பாக அறிவிப்போம், ஆனால் இப்போது தங்களது வேலைகளில் தான் இருவருக்கும் கவனம் அதிகமாக உள்ளது என்று கூறி வந்தனர்.

இருவரும் இணைந்து எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகிவிடும். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா கையில் மோதிரம் அணிந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவர் இதுவரை இப்படி ஒரு புகைப்படம் பதிவு செய்தது இல்லை, எனவே இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)