படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் பகத் பாசில்.. தற்போது அவரது நிலை என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை நஸ்ரியா. ராஜா ராணி, நய்யாண்டி, வாயை முடி பேசவும், நேரம் என சில படங்களே நடித்த அவர் திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர் நடிகர் பகத் பாசிலை தான் திருமணம் செய்துகொண்டார். பிரபல மலையாள நடிகருமான நஸ்ரியாவின் கணவர் தமிழ் சினிமாவில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் மட்டும் நடித்துள்ளார்.

   

ஆனால், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து எண்ணற்ற ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ளார். பகத் அண்மையில் Malayankunju என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு சண்டைக் காட்சிக்காக பகத் மிக உயரத்தில் இருந்து குதித்துள்ளார். இவர், தற்போது பட ஷூட்டிங்கின் போது கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், அவருக்கு மூக்கு மற்றும் முகத்தில் அடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஃபகத் பாசில் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனே அழைத்து செல்லப்பட்டார். அவருத்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் சிகிச்சை பின் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.