பயணத்தின் போது வந்த திடீர் மெசேஜால் ஷாக் : தக்க சமயத்தில் உதவிய போலீஸ்..!!

பயணத்தின் போது தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வழி தெரியாமல் திண்டாடிய கொரோனா நோயாளிக்கு தக்க சமயத்தில் போலீசார் உதவி செய்தனர்.

கும்பகோணத்தில் சென்னை அருகில் உள்ள புழல் பகுதியைச் சேர்ந்தவர் பாலுமகேந்திரன் (29). இவர் புழல்பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஜெனரேட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு கொரானா தொற்று உள்ளதா..? என்று பரிசோதனை செய்துள்ளார். இதனிடையே, இவர் சென்னையிலிருந்து தனது சொந்த மன்னார்குடி செல்வதற்காக லாரி மூலம் வந்துள்ளார்.

   

அப்போது அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி என்ற இடத்திற்கு வந்துபோது புழல் பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் பாலு மகேந்திரன் தொடர்பு கொண்டு உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் செல்பேசிக்கு குறுந்தகவல் ஒன்றையும் அனுப்பி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காரைக்குறிச்சியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணத்திற்கு அவ்வழியே சென்ற லாரி மூலம் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு வந்துள்ளார். தனக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த குறுந்தகவல் மற்றும் தொலைபேசியில் கூறியதை மருத்துவமனையில் தெரிவிக்கவும், அவர்கள் மருத்துவமனையில் சேருவதற்கான அனுமதி சீட்டை கொடுத்து, கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கல்லூரிக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.

அன்னை கல்லூரி எங்கு இருக்கிறது என தெரியாத பாலு மகேந்திரன் நடந்து ஒவ்வொருத்தராக விசாரித்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றுள்ளார். முதுகில் பையை மாட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் நடந்து செல்வதை பார்த்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறாய் என விசாரித்தனர்.

 

அப்போது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், அன்னை கல்லூரிக்கு செல்வதாகவும் தெரிவிக்கவே, பாலுமகேந்திரா அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, காவல் ஆய்வாளர் மணிவேலுக்கு தகவல் தர, சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர், பாலுமகேந்திரனிடம் விசாரனை மேற்கொண்டார். பின்பு ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வரவழைத்து அதன் மூலம் பாலுமகேந்திரா கோவிலாச்சேரியில் உள்ள கோவிட் சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.