நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர். நடிகர் சிம்பு இந்த வருடம் அவரது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை கொடுத்து வருகிறார். இந்த லாக்டவுனை பயன்படுத்தி உடல் எடை குறைத்து பழையபடி உள்ளார். எல்லா சமூக வலைதளங்களிலும் மீண்டும் வந்தது எல்லம் வைரலாக பேசப்பட்டது.
இப்பொழுது எல்லாம் இணையத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வரும் சிம்புவிம் புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருவதும் வழக்கம். அந்த வகையில் பல வருடங்களாக STR-ன் திரைப்படங்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து நடிகர் STR தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், அந்த வகையில் இவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது நாம் பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் வகையில் STR-ன் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், STR பல வருடங்களுக்கு முன் எடுத்துள்ள செல்பியில் மீசையின்றி கையில் நோக்கியா போனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இது எப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே என்பதை கண்டுபிடிங்க எனவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வெளியான 10 நிமிடத்தில் 15,000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
View this post on Instagram