விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதையாக நகர்கிறது. சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள். இந்த தொடரின் கதையில் இல்லத்தரசி என்பவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக போன்ற பல பொறுப்புகளில் வகிக்கின்றார்.
ஆனால் அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை. நேற்றோடு இந்த சீரியலின் மெகா சங்கம காட்சிகள் முடிவடைந்தன. இந்த சீரியலின் முக்கிய நாயகி வேறு தான்.
ஆனால் சின்ன வேடத்தில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா. அவரது நிஜ பெயர் ஜெனீபர். இவர் தனது சமூக வலைதளத்தில் கணவருடன் எடுத்த ஒரு ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். காரணம் அவர்களின் திருமண நாள் என்பதால் கல்யாணத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்பெஷல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இவரா இந்த நாயகியின் கணவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
View this post on Instagram