விஜய் தொலைக்காட்சியில் மக்கள் பேராதரவுடன் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற எத்தனையோ கோடி மக்கள் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் தற்போது வரை பல பின்னணி பாடகர், பாடகிகள் தமிழ் சினிமாவில் வந்துள்ளனர்.
சீசன் 1ல் இருந்து 8 வரை மக்களில் வரவேற்பில் வளர்ந்து வந்துள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. லாக் டவுன் போட்டதால் இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஆரம்பம் மட்டும் 9 மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. இதில் தற்போது 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சூப்பர் சிங்கர் 8 சீசன் விஜய் டிவியில் நடந்து வர, இதிலும் பல திறமையாளர்கள் ஒவ்வொருவருடன் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் பெரிய இசை ஜாம்பவான்களோடு பாடும் வாய்ப்பை பெற்றவர் பிரியங்கா. தனது மெல்லிய குரலால் பல பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். இவர் பாடுவதை தாண்டி தற்போது மருத்துவராக அவதாரம் எடுத்துள்ளார். பல் மருத்துவராக முதல் நாள் வேலையின் போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்களும், மக்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
பல் மருத்துவ சேவையில் முதல் நாள் ♥️????⚕️ pic.twitter.com/6FRidiwhcN
— Priyanka NK (@PriyankaoffI) March 23, 2021