பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் மனைவி, குழந்தையை பார்த்துள்ளீர்களா? முதன்முறையாக வெளியான புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்று ஓர் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இதில் மிகவும் முக்கியமான கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகர் குமரன்.

   

இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் குமரன் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலமடைந்த சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணம் இவர்கள் திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான குழந்தையும் பிறந்துள்ளது. அதே போல திருமணத்திற்கு பின்னர் சுஹாசினி, நடிப்பதையும் நிறுத்திவிட்டார். நடிகை சுஹாசினி ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அழகிய தருணத்தில் எடுக்கப்பட்ட குமரன், சுஹாசினி காதல் தம்பதி குழந்தையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..