விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் படு பிரபலம். அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. இதில் மிகவும் முக்கியமான கதிர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகர் குமரன். இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட நடிகர் குமரன் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலமடைந்த சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணம் இவர்கள் திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான குழந்தையும் பிறந்துள்ளது.
இந்த சீரியலை தாண்டி வேறு எதிலும் குமாரனை பார்க்க முடியாது. ஆனால் இவர் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். இப்போது அவரின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. தாடி, மீசை இல்லாமல் தனது மனைவியுடன் அவர் எடுத்த புகைப்படம் தான் அது. இதே நீங்களும் பார்க்க..