பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் கணவர் யாரு தெரியுமா? வெளியாகிய லேட்டஸ்ட் புகைப்படம்

விஜய் தொலைகாட்சித்தியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான மெகா சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக ஒளிபரப்பபட்டு வருகிறது. தமிழில் பெரிய ஹிட்டாகியுள்ள இந்த சீரியல் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்துள்ளனர். இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர்.

   

இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தனம், கதிர், முல்லை, ஜீவா, மீனா என அணைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அதிலும் முல்லை கதிர் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இந்த சீரியலில் தனலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் நடிகை சுஜிதா.

சுஜிதா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கலக்கி வருவது மட்டுமின்றி, தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை சுஜிதா அவரின் கணவர் தனுஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் அவரின் மகனும் உள்ளார்.