விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் மிகவும் பிரபலம். சின்னத்திரை சீரியலில் TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல் பாரதி கண்ணம்மா தான். இதில் கதாநாயகனாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் என்பவர் நடிக்க, அறிமுக நடிகை ரோஷினி கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது. சீரியலில் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்பது தான் ரசிகர்களின் ஏக்கம். அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கருப்பாகவும் வலம்வருவார் கண்ணம்மா. விளம்பர மாடலாக நடித்து வந்தவருக்கு அந்த சீரியல் மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ரோஷினி, தற்போது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சமூக வலைத்தளத்தில் சேர்த்துள்ளார். அதே போல் தனது ரசிகர்களை கவர்வதற்கு அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை ரோஷினி, தற்போது மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..