பாரதி கண்ணம்மா சீரியல் முடியப்போகிறதா? இயக்குனரே சொன்ன தகவல்! வருத்தத்தில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது. அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கருப்பாகவும் வலம்வருவார் கண்ணம்மா. விளம்பர மாடலாக நடித்து வந்தவருக்கு அந்த சீரியல் மிகநல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

   

விஜய்யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் பல மாதங்களாக டிஆர்பியில் இரண்டாம் இடத்தை பிடித்து வந்தது. இந்த சீரியல் ஆரம்பத்தில் கருப்பு நிற நாயகி என்கிற விளம்பரத்துடன் தான் தொடங்கியது, இப்போது அந்த கான்செப்டில் இருந்து டிராக் மாறியுள்ளது. சீரியலில் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்பது தான் ரசிகர்களின் ஏக்கம். ஆனால் அதுபற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

இந்த நிலையில் தான் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் கொடுத்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பேட்டியில் அவர், சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைகிறார்களோ அப்போது சீரியல் முடியும் என கூறியுள்ளார். சீரியலில் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு வருவது போல் தெரிவதால் ரசிகர்கள் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா என ஷாக் ஆகியுள்ளனர்.