பிக்பாஸ் சனம் ஷெட்டியின் புதிய காதலர் யாரு தெரியுமா? காதலர் தினத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலம். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓர் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்துவழங்கி வருகிறார். இதுவரை வெற்றிகரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளது. பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சனம் ஷெட்டி.

   

நிகழ்ச்சியில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனி ஆளாக விளையாட்டை விளையாடி வந்தார். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் ரசிகர்களோ அவர் சீக்ரெட் ரூமில் இருப்பார் என நினைத்தனர், அப்படி ஒன்றும் கடைசி வரை நடக்கவே இல்லை. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி பின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் வந்தார். இவர் முன்னாள் போட்டியாளர் தர்ஷனின் காதலி என்பது ஊரறிந்த விஷயம்.

இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருவரது கையைப் பிடித்தபடி நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள் மோன். காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி.” என்று புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அந்த அதிர்ஷ்டசாலி யார், மோன் என்பது யார் என்று கூறுங்கள் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் ஒரு சிலர் வாழ்த்து தெரிவித்தும் கருத்து பதிவிட்டுள்ளனர்.