பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் சிம்பு இல்லையாம்! இனி இந்த பிரபலம் தானாம்! வெளியான தகவல்

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் ஜூன் மாதம் ஒளிப்பரப்பாக போகும் பிக்பாஸ் 5 வது சீசனை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. மேலும், இதற்கு போட்டியாளர்கள் மற்றும் தொகுப்பாளரை தேர்வு செய்ய மும்முறம் காட்டி வருவதாகவும் வெளியானது.

   

இதற்கு காரணமே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளது தான் என கூறப்படுகிறது. ஆனால், இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் நடிகர் கமல் தான் நிச்சயம் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலில் அவர் தனது சொந்த காசை செலவு செய்து வருவதால் அதை ஈடுகட்டும் பொருட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, போன சீசன்களிலும் சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என ஒரு பக்கம் கூவிக்கொண்டு இருந்தாலும், கமலின் அரசியல் பிரவேசத்திற்கான சரியான மேடையை அவர் எப்படி விடுவார் என புரிந்துகொள்ளவேண்டும் என நெட்டிசன்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.