பிக்பாஸ் பிரபலம் ஷிவானிக்கு விரைவில் காதல் திருமணமாம்! மாப்பிள்ளை யாரு தெரியுமா? இவரும் ஒரு நடிகர் தான்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதன்பின் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். நிறைய சீரியல்கள் மூலம் இவர் மக்களிடம் பெயர் பெற்றாலும் இன்ஸ்டா தான் அதிகம் பிரபலம் ஆக்கியது என்றே கூறலாம்.

   

ஏனெனில் இந்த லாக் டவுன் காலத்தில் அவர் அன்றாடம் ஒரு புகைப்படம் வெளியிட அது ரசிகர்களிடம் பெரிய அளவில் வைரலாகும். சமீபத்தில் பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிங்கப்பெண்ணாக வெளியில் வந்தார். உள்ளே பாலாவிற்கும், இவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருந்த நிலையில் ஷிவானியின் தாய் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சரியாக ஷிவானியிடம் சண்டையிட்டார்.

இந்நிலையில் நடிகை ஷிவானியுடன் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் இணைந்து நடித்த அசீம் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் இருவரும் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்மின்றி ஷிவானி மற்றும் அசீம் காதலித்து வருகிறார்கள் என்றும், விரைவில் திருமணம் கூட ஆகலாம் என்றும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.