விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இதுவாக அமையும் என ஒரு பக்கம் பேச்சு அடிபட்டது.
அதற்கு காரணம் கமல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் அவர் நிச்சயம் படு பிசியாக இருப்பார் என்பது தான். அதனால் இந்த சீசன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு சீசன்களாக தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் அடுத்து வரவிற்கும் 5ஆம் சீசனை தொகுத்து வழங்குவாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதில் கமல் ஹாசன், வரவிற்கும் சட்டமன்ற தேர்தலில் வென்றுவிட்டால் பிக் பாஸ் சீசன் 5 தொகுத்து வழங்க வாய்ப்பில்லை. இதனால் கமல் ஹாசனின் இடத்திற்கு யார் வருவார். அப்படி வருபவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவார்களா என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் கமல் ஹாசன் ஜெய்க்காத பச்சத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5வை கமல் ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.