பிஞ்சுக் குழந்தைக்காக அப்பா செய்த வேலை தெரியுமா..? இது வேற லெவல் பாசம்.. நீங்களே வீடியோவைப் பாருங்க..!

பாசத்துக்கு முன்பாக பணம் ஒரு விசயமே இல்லை. இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும்தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பணம் என்பது வெறும் காகிதம் தான். என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை, மகன் பாசம் வருவதில்லை. அது உணர்வால் கட்டி எழுப்பப்படும் அற்புதம்.

   

பிஞ்சுக் குழந்தை தினம், தினம் வளரும் ஒவ்வொரு நாளும் பெற்றோர்களுக்கு மிகவும் முக்கியமான தருணம் ஆகும். அதிலும் அப்பாக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை அணு, அணுவாக ரசிப்பார்கள். அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான், ஒரு குழந்தையின் மீது அதன் தந்தை அதீத பாசம் வைத்துள்ளார். அந்தக் குழந்தை கட்டிலில் இருந்து தானே இறங்க முயற்சிப்பதை தந்தை பார்க்கிறார்.

குழந்தைக்கு தன்னாலேயே இறங்க முடியாது. காரணம் குழந்தைக்கு கால் எட்டாது. இதை உணர்ந்திருக்கும் தந்தை, குழந்தைக்கு கால் எட்டுவதற்கு வசதியாக கட்டிலின் கீழே படுத்து முட்டுக் கொடுக்கிறார். அவர் மீது மிதித்து குழந்தை இறங்குகிறது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.