பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ்வின் மனைவியா இது? வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன்! புகைப்படம் இதோ

சீரியல் சின்னத்திரையில் மறக்கமுடியாத பல முகங்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகை பிரீத்தி. 2006 ல் பந்தம் சீரியல் மூலம் அறிமுகமானவர் இவர். அதன் பின்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 2 ல் நடிகர் டிங்கு உடன் இணைந்து டைட்டில் வென்றார். மேலும் ப்ரீத்தி ஆண்டாள் அழகர், பொம்மலாட்டம், பந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பல சீரியல்களில் நடித்து வந்த அவர் கடந்த 6 வருடங்களாக சின்னத்திரையில் இல்லை. தற்போது அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

சூப்பர் மாம், மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சீரியல் நடிகரான சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவ் பிரபல தொலைக்காட்சிகளில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர். இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற தொடரில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் குடும்ப பெண்ணாக இருந்து வந்தார்.

பின் இவர்களுக்கு ஆதவ், லயா என மகள் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஆம் தனது உடலில் உள்ள 15 கிலோவை குறைத்து, தற்போது எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *