விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடிகையாக பிரபலமானவர் நடிகை ரச்சிதா.ரசிதாவின் அழகுக்காகவே சீரியல் நடிகைகளிலேயே இவருக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம்,அந்த அளவுக்கு இவர் பிரபலம்.இந்த சீரியலின் முடிவிற்கு பிறகு மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரச்சிதாவின் கணவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி நடிகை ரச்சிதாவின் கணவரும் ஒரு நடிகர் தானாம்.ஆம் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சுடுவா சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகர் தினேஷ் தான் இவரது கணவராம்.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தமிழர் திருநாளான பொங்கல் அன்று சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படமும் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.