பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் மனைவி யாரு தெரியுமா? வெளியான அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்

தமிழ் மக்கள் மத்தியில் நீயா நானா மூலம் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் தொகுப்பாளர் கோபிநாத் அவர்கள். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி இருக்கிறார். மக்கள் யார் பக்கம் எனும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் கோபிநாத். அதே போல் சிகரம் தொட்ட மனிதர்கள், என் தேசம் என் மக்கள், நடந்தது என்ன உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் கோபிநாத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கி தந்து நிகழ்ச்சி நீயா நானா தான். இவர் வீ ஜே வாக மட்டுமல்லாமல் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுத்தில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்து இருந்தது. நீயா நானா என்ற ஹிட் ஷோவை தொடர்ந்து பல வருடங்களாக நடத்தி வருகிறார் கோபிநாத். நல்ல தமிழ் பேச்சாளரான இவரை பலரும் ஒரு நல்ல உதாரணமாக எடுத்திருக்கிறார்.

தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர் விளங்கி வரும் கோபிநாத்திற்கு, துர்கா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் பிள்ளை இருக்கிறார். இந்நிலையில் தொகுப்பாளர் கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இவரின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரையும் அழகிய ஜோடி என கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..